பனிப்புயல் நாட்டின்
பட்டுப் பூவே
உன் பாதம் பட்டு
பனித்துளியே பூரிப்பில் உருகுதடி
உன் பாதம் தேடி
ஒலிவ் இலைகள் தேடி
அலைந்து இறுதியில்
உன் பாதங்களை பாதணிகள்
தழுவியிருப்பது கண்டு
அதன் மேல் கோபம் கொள்கின்றன
உன் கண்களை கயலுக்கு (((மீனுக்கு)))
ஒப்பிட்டவன் யார்
தூண்டிலுக்கு ஒப்பிடச் சொல்
ஏனெனில் அதில் விழுந்து
நாம் தானே மீனாக துடிக்கிறோம்
உன் நெற்றி அர்ஜுனனின் வில்லா
அதில் நானேற்றியா காதல் பாணம் எய்தாய்?
உன் கூந்தல்கள் மழை பொழியும் கார் மேகம்
உன் கூந்தல் அழகில் இதையத்தில் இரத்தம் சொட்டுகிறதே
உன் குரல்கள் கேட்டு குயில்கள் ஆணவம்
அழித்துக் கொள்கின்றன
உன்னில் காமம் தேடினேன்
காதலை கண்டு கொண்டேன்
உன்னில் எதையே தேடினேன்
என்னைக் கண்டு கொண்டேன்
மாரப்பினுள் சுருண்டு கிடந்த இதயம்
இப்போ மனசு தேடி அலைகிறது
பெண்ணிகள் தசையால் பின்னபபட்டவர்
என்பது பொய் என உணர்த்தி
உணர்ச்சிகளின் உறைவிடம்
என புரிய வைத்தவளே
காதலுக்காக நானும் ஏங்குகிறேன்
ஆனால் ஏதோ என்னை தடுக்கிறது
அது! கடமையா
காழ்ப்புணர்ச்சியா
கீழ்படியா
குற்ற உணர்ச்சியா
எனக்கே புரியலையே!